கடும் பனிப்பொழிவால் முடங்கிய அமெரிக்கா World News

America frozen by heavy snow

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையாக பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்தும், விமான போக்குவரத்தும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1,431 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தொடர்ந்து தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட இடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடப்பதால் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எனவே 1431 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 12,645 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன. கடும் பனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஹர்வர்டு பல்கலை,யும் மூடப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Tags : America, America frozen, Heavy snow, ஹர்வர்டு பல்கலை, American climate, முடங்கிய அமெரிக்கா, அமெரிக்கா, கடும் பனி, கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ்