கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அதர்வா Cinema News

Atharvaa will Act Karthik Subbaraj film

தற்போது 100 படத்தில் நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். #Atharvaa

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா.

இந்த படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பக்கபலமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. இதில் சித்தார்த் வேடத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் மிருணாலினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Tags : Atharvaa, Karthik Subbaraj, Jigarthanda, அதர்வா, கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா