த்ரில்லர் கதையாக உருவாகும் போதை ஏறி புத்தி மாறி Cinema News

Bodhai Yeri Budhi Maari doesnt promote alcoholism Chandru

அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் நாயனாக அறிமுகமாகும் போதை ஏறி புத்தி மாறி படம் த்ரில்லர் கதையாக உருவாகி வருகிறது. #BodhaiYeriBudhiMaari #Dheeraj #KRChandru

ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் உருவாகும் படம் `போதை ஏறி புத்தி மாறி'. த்ரில்லர் படமாக உருவாகும் இதன்மூலம், பல்வேறு குறும்படங்களில் நடித்து பிரபலமான தீரஜ் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.

படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

தீரஜ் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்றார்.

இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே.பி. இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பையும், கோபி ஆனந்த் கலை பணிகளையும் கவனிக்கின்றனர். #BodhaiYeriBudhiMaari #Dheeraj #KRChandru

Tags : Bodhai Yeri Budhi Maari, Dheeraj, KR Chandru, Pradaini Surva, DOP Balasubramaniam, K P, போதை ஏறி புத்தி மாறி, தீரஜ், பிரதைனி சர்வா, கே.ஆர். சந்துரு, பாலசுப்ரமணியம், கே.பி.