உங்கள் மனைவியை இப்படி கட்டிப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் Lifestyle News

Changes in the body if you hug your wife

கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.

நமது துணையை அணைக்கும் போது ஒரு இதமான உணர்வு ஆழ் மனதில் இருந்து உண்டாகும். கட்டிபிடிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் புதுவித உணர்வை உணர்வோம். இது நமது காதலிக்கு மட்டுமில்லை. நமக்கு விருப்பமான ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது இந்த உணர்வு நமக்கு உண்டாகும்.

தினமும் கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அதில் இதுவும் ஒன்று. கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.
 தினமும் கட்டிப்பிடிக்கும் போது எதிர்ப்பு சக்தி பல மடங்காக நமது உடலில் அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. கட்டிப்பிடிக்கும் இருவருக்கும் இந்த பயன் கிடைக்குமாம். இதனால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

கட்டிப்பித்தலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ஆண்கள் தான் கட்டிபிடித்தலை பெரும்பாலும் துவங்குகின்றனர் என்று..! இது இருவருக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்த முக்கிய பாலமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நமது மனசுக்கு பிடித்த ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் ஏரளமான வகையில் மாற்றம் பெறுகின்றன. குறிப்பாக ஆக்சிடாக்சின், டோபோமின் போன்ற ஹார்மோன்கள் சந்தோஷத்தை தர கூடிய ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. மேலும், ஹார்மோன்களின் செயல்திறனும் சீராக இருக்கிறது.

கட்டிப்பிடிப்பதால் உடளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மன அழுத்தம் குறைதல் தான். தினமும் கட்டிபிடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடுகிறது. மேலும், இதயம் சார்ந்த நோய்களும் தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.கட்டிப்பிடிக்கும் பலர் இதை உணர தவறுகின்றனர். கட்டிப்பிடிக்கும் போது நமது துணையின் இதய சத்தத்தை கேட்டால் நமது உடலுக்கு மகிழ்ச்சியை தருமாம். அத்துடன் நமது இதய செயல்திறனையும் சீராக வைக்கும்.

சில தம்பதியர் தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த கட்டிபிடித்தல் புதுவித யுக்தியாக உதவும். கட்டிப்பிடிப்பதால் ஹார்மோன்கள் தாம்பத்திய உணர்வை அதிகரித்து இனிமையான தம்பத்தியத்தை ஏற்படுத்தும்.

கட்டிபிடித்தலில் பலவித வகைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே பெரும்பாலும் பிடிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதில் ஆண்களுக்கு பிடித்தமானதை விட பெண்களுக்கு பிடித்தமானதே பல வகையில் உள்ளதாம்.

உங்கள் துணையை முழுவதுமாக கட்டிபிடித்து கொண்டால் அதுவே ஹனிமூன் கட்டிப்பிடி என்று அர்த்தம். இது தூங்கும் நிலையில் இருக்கும் போது முழுமையாக கட்டிப்பிடிப்பதை குறிக்கிறது.

பெண்கள் பலருக்கு இந்த வகை கட்டிபிடித்தலை பிடிக்கும். உங்களது காதலியை பின்னிருந்தது கட்டிப்பிடித்தால் அவருக்கு உங்கள் மீது அதிக காதல் உண்டாகும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒருவர் மடியில் தூங்கி கொண்டே காட்டுப்பிடிக்கும் வகையை பெரும்பாலும் அதிக ரொமான்டிக் கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். பூங்கா, கடற்கரை போன்ற இடத்தில் இது போன்ற கட்டிபிடிக்கும் வகையை உங்களால் பெரிதும் பார்க்க இயலும்.

பலருக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்று. பெரும்பாலும் ஆண்கள் தான் இந்த வகை கட்டிபிடித்தலை செய்வார்கள். ஆதாவது, ஒரு காலை தனது துணையின் மேல் போட்டு கொண்டு தூங்குவார்கள். இது இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்கும்.

யாராக இருந்தாலும் கட்டிபிடித்தல் ஒரு சிறந்த மருந்தாக தான் செயல்படுகிறது. தினமும் கட்டிபிடித்தால் மேற்சொன்ன நன்மைகள் உங்கள் உடலுக்கு கிடைக்கும். எனவே, அதிக காதலுடனும் அன்புடனும் உங்கள் இணையை கட்டிப்பிடித்து வாழுங்கள் நண்பர்களே..!

Tags : Couples In Bed, Couples Happy, women health, Women Health Problem, Women Health, தாம்பத்தியம், பெண்கள் உடல்நலம்