விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர் India News

Crocodile tears for farmers by opposite party : Prime Minister

விவசாயிகளுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள், ஆட்சியில் இருந்த போது பாசன திட்டங்களை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி கேட்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்

முடக்கம்

உ.பி.,மாநிலம், மிர்சாப்பூரில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது: உ.பி.,யை ஆண்ட முந்தைய அரசுகள், பல ஆண்டுகளாக வளர்ச்சி திட்டங்களை தாமதபடுத்தி வந்தன. வளர்ச்சி குறித்து வெற்றி பேச்சுகளும்,வாக்குறுதிகளுமே அளிக்கப்பட்டன. பா.ஜ., தலைமையிலான தேஜ கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல், பூர்வாஞ்சல் பகுதியில் வளர்ச்சி பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதன்பலன்களை இன்று நாம் பார்க்கிறோம். முந்தைய அரசுகள் , திட்டமிடப்படாத திட்டங்களை கொண்டு வந்து பாதியில் நிறுத்தின. இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்கள் பயன் பெற்றிருப்பார்கள். இந்த பகுதியை முன்னெடுத்து செல்லவே இங்கு வந்துள்ளேன். மிர்சாப்பூரில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

அதிகரிப்பு

ஒவ்வொரு சொட்டு நீரும் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். நீரை மிச்சப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு இரு மடங்கு பலன் கிடைக்கும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிப்பவர்களிடம், அவர்களது ஆட்சி காலத்தில் பாசன திட்டங்களை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்ப வேண்டும். விவசாயிகள் பெயரில் அரசியல் செய்பவர்களுக்கு, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த நேரம் இல்லை. அவர்கள் கோப்புகளையே பார்த்து கொண்டிருந்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Prime Minister, PM, Modi, Statements of Modi, Details of Prime Minister, அரசு ஆட்சி, வளர்ச்சி பணிகள், Crocodile tears of opposite party, தேஜ கூட்டணி, Farmers, பிரதமர் மோடி, Crocodile tears, முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள், எதிர்கட்சிகள், முதலை கண்ணீர், Help for farmers, விவசாயி, Opposite party, பிரதமர், Modi's answer to the opposite party