தி.மு.க., பயப்படுகிறது: பன்னீர்செல்வம் India News

DMK was scared : OPS

''உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தினால், தி.மு.க., வழக்கு தொடுத்து இருக்கிறது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: கோடநாடு விவகாரம் நடந்து முடிந்து, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சக்தியற்ற எதிர்க்கட்சிகள், இதை அரசியல் நெருக்கடி கொடுப்பதற்காகவும், அவதுாறு பரப்ப வேண்டும் என்பதற்காகவும் செய்கின்றனர். இதன் வாயிலாக,இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் நினைப்பது நடக்காது. அவர்களின் குற்றச்சாட்டை, நாங்கள் எதிர்க்கிறோம்; நியாயம், எங்கள் பக்கம் இருக்கிறது.

தேர்தலில் லாபம் பெற நினைக்கின்றனர். 

பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில், யூகங்கள் அடிப்படையில், தொகுதி பங்கீடு குறித்து கூறுவது, உண்மையில்லை. அதிகாரபூர்வமாக முடிவு எடுக்கப்பட்டு, முதலில், தொலைக்காட்சிகளில், யூகங்கள் அடிப்படையில், தொகுதி பங்கீடு குறித்து கூறுவது, உண்மையில்லை. அதிகாரபூர்வமாக முடிவு எடுக்கப்பட்டு, முதலில்,
ஊடகங்களுக்குத் தான் தெரியப்படுத்துவோம். தொலைக்காட்சிகளில், தவறான கருத்துகள் பரப்பப்படுவது, சட்டப்படி குற்றம். உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தினால், தி.மு.க., சார்பில், உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : OPS, OPS statements, Paneerselvam, DMK, பத்திரிக்கை, உள்ளாட்சித் தேர்தல், DMK scared, பன்னீர்செல்வம், தி.மு.க., வழக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம்