எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி India News

Eight way road plans are needed : Rajini

எட்டு வழிசாலை போன்ற பெரிய திட்டங்கள் தமிழகத்திற்கு வர வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மகிழ்ச்சி

சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 'சூப்பர் ஸ்டார்' என்றால் எனது பெயரை குழந்தைகள் சொல்வது கடவுள் அருள். காமராஜர் மாதிரி அரசியல்வாதிகள் மீண்டும் தோன்ற வேண்டும் என்பது அனைவரின் ஆசை; எனது ஆசையும் கூட. தமிழருவி மணியன், அரசியலில் என்னோடு இணைந்து செயல்பட நினைப்பது மகிழ்ச்சியே.

தேர்தலில் போட்டி

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் நேரம் உள்ளது. அப்போது முடிவு செய்யப்படும். கட்சி துவக்குவதற்கும் நேரம் உள்ளது.

கல்வித்துறையில்

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகம் சிறந்து விளங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார்.

வரவேற்பு

சாத்தியம் இல்லை என்பது எதுவும் கிடையாது. நல்ல எண்ணம் தான் வேண்டும்.ஒரே நேரத்தில் சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் தேர்தல் நடத்துவது நல்லது. அவ்வாறு தேர்தல் நடத்துமாறு செய்ய வேண்டும். ஊழல் குறித்து அமித்ஷா சொன்னது அவரது கருத்து. அவருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சொல்லியுள்ளார். 

விமர்சனம்

லோக் ஆயுக்தா அமைத்ததை வரவேற்கிறேன். சக்தி வாய்ந்த லோக் ஆயுக்தா இயங்கினால் சிறப்பாக இருக்கும். தமிழக அரசை அனைவரும் விமர்சனம் செய்கின்றனர். விமர்சனம் செய்வது எளிது. தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்படலாம். பெரிய திட்டங்களை கொண்டு வரலாம்.

வேலைவாய்ப்புகள் பெருகும்

எட்டு வழி பசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் வர வேண்டும். இதனால், நாடு வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பெரிய திட்டங்கள் வரும் போது இழப்பு வர தான் செய்யும். அவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், பணம், நிலம் கொடுக்க வேண்டும். முடிந்தவரை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் திட்டங்களை செயல்படுத்தினால், இன்னும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rajini, Rajini Kanth, Details of Rajini, Statements of Rajini, தமிழக அரசு, Rajini's speech, லோக்சபா தேர்தல், அமைச்சர் செங்கோட்டையன், Rajini's plans, ரஜினி, பெரிய திட்டங்கள், காமராஜர், Rajini's reasons, எட்டு வழிச்சாலை, 8 Way road plan, 8 way road