விஜய் படத்தில் ஜெய் பட நடிகை Cinema News

Jai heroine in Vijay Movie

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் ஜெய்யுடன் ஜோடி போட்ட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Thalapathy63

இந்தியில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் தமிழ் கதாநாயகர்களுக்கு வில்லன்களாக நடிப்பது சமீபகாலமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் அடுத்து நடித்துவரும் படத்தில் இந்தி நடிகர் வில்லனாக இணைந்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் படத்தில் சிங்கப் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஜாக்கி ஷெராப். சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் இணைந்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், நடிகை ரெபா மோனிகா ஜான் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘ஜருகண்டி’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த இவர், பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகளில் ஒருவராக இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

Tags : Thalapathy 63, Vijay 63, Thalapathy Vijay, Vijay, Atlee, தளபதி 63, விஜய் 63, தளபதி விஜய், விஜய், அட்லி