ஜெயலலிதா படத்தை பிரதமரை கொண்டு திறந்திருக்க வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன் India News

Jayalalithaa image should be open with the Prime Minister in the assembly

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை பிரதமரையோ அல்லது ஜனாதிபதியையோ வைத்து திறந்திருக்க வேண்டும் என தினகரன ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தினகரன் அணி அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் தங்கதமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தினை திறந்ததை வரவேற்கிறோம். ஆனால் அவசரகோலத்தில் எடப்பாடி அரசு திறந்துள்ளது.

ஜெயலலிதாவை குற்றவாளி என கர்நாடக கீழ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேல்கோர்ட்டு நிரபராதி என தீர்ப்பு கூறியது. அந்தநிலையில் தான் அவர் மரணமடைந்தார்.

மேல்முறையீட்டில் தான் குற்றவாளி என கூறப்பட்டது. அவர் உயிருடன் இருக்குவரையில் நிரபராதியாகத்தான் இருந்தார். அவரது படத்தினை சட்டபேரவையில் திறப்பதில் தவறில்லை. சிலர் அரசியல் நோக்கத்திற்காக படத்தினை திறக்ககூடாது என கூறுகின்றனர்.

ஜெயலலிதா படத்தை பிரதமரையோ, அல்லது ஜனாபதியையோ, துணை ஜனாதிபதியையோ கொண்டு திறந்திருந்தால் அவருக்கு அது பெருமை சேர்க்கும். ஆட்சி அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமியிடம் தானே உள்ளது. அவரால் பிரதமரை வர வழைக்கமுடியாதா?

படத்திறப்பிற்கு பிரதமரை அழைக்கமுடியாத இந்த அரசு ராஜினமா செய்திருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2000-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் தினகரன்தான் என ஜெயலலிதாவிடம் நான் கூறியதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளாரே என கேட்டதற்கு அப்படி நான் கூறியிருந்தால் தற்போது ஓ.பி.எஸ். பக்கம் தானே இருந்திருப்பேன். எப்படி தினகரன் அணியில் இருப்பேன் என பதில் கூறினார். #tamilnews

Tags : attamil,tamilnews,indianews,jayalalithaaportrail,jayalalithaportrait,Assembly, Jayalalithaa image opening, Thangathammyzhellvan, சட்டசபை, ஜெயலலிதா படம் திறப்பு, தங்கதமிழ்செல்வன்