ராஜஸ்தானில் 100 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்குதல் India News

Jika virus attacked for 100 people in Rajasthan

ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்திய மருந்துவ ஆய்வு குழுவை ராஜஸ்தானுக்கு அனுப்பி உள்ளது மத்திய அரசு.

ஜிகா வைரசாஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் கர்ப்பிணி பெண்கள் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரை தொடர்ந்து அருகில் இருக்கும் 2 மாவட்டங்களில் ஜிகா வைரசால் 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாவும், ஜிகா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா வைரஸ்கள் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாஸ்திரி நகர் பகுதியில் தான் அதிகமானவர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் வசிப்பதால் கொசு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு கர்ப்பிணி பெண்கள் யாரும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Rajasthan, Details of Jika virus, Jika virus, 100 people were attacked, சிக்குன்குனியா, கொசு ஒழிப்பு, Mosquito, Mosquito problem, Central government, மத்திய அரசு, ஜிகா, டெங்கு, Health issues, ஜிகா வைரஸ் தாக்குதல், ஜிகா வைரஸ்