நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி India News

Karunanidhi meets volunteers tomorrow

பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, நாளை (ஜனவரி 14) கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்தித்து, ரூ.10 வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு, நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார்.


காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதி, தொண்டர்களுக்கு புதிய ரூ.50 நோட்டு வழங்க உள்ளார். கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதால் கோபாலபுரம் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Karunanidhi, Details of Karunanidhi, கருணாநிதி தொண்டர், கோபாலபுரம் வீடு, Statements of Karunanidhi, கருணாநிதி, திமுக தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு, Karunanidhi press meet, நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி, Karunanidhi meets his volonteers, Karunanidhi families, Karunanidhi party, Politics of Karunanidhi, Karunanidhi sons, Biography of Karunanidhi, Age of Karunanidhi