பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன் Cinema News

Kayal Chandran changed her Name


பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’. இதில் சந்திரன் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவே, கயல் சந்திரன் என்று பலராலும் அழைக்கப்பட்டு வந்தார். தற்போது தன்னுடைய உண்மை பெயரான சந்திரமௌலி என்று அழைக்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள அறிக்கையில், ‘எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது.

இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, அனைவரும் “சந்திரன்” என்ற என் பெயரை இனி “சந்திரமௌலி” என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’.

Tags : Kayal Chandran, Chandramouli, கயல் சந்திரன், சந்திரமௌலி