கொலைகாரன் தலைப்பை தேர்வு செய்தவர் அவர்தான் - இயக்குனர் Cinema News

Kolaigaran Movie Update

விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொலைகாரன்’ படத்தின் தலைப்பை யார் தேர்வு செய்தார்கள் என்பதை இயக்குனர் கூறியிருக்கிறார். #Kolaigaran

இசையமைப்பாளராக இருந்து முன்னணி நடிகராகி இருக்கும் விஜய் ஆண்டனி அடுத்து அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் படம் கொலை காரன். படம் பற்றி ஆண்ட்ரூ லூயிஸ் அளித்துள்ள பேட்டியில் ’நகரத்தில் அடுத்து அடுத்து கொடூரமான கொலைகள் நடக்கின்றன.

கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜுன் விசாரிக்கிறார். விஜய் ஆண்டனி தான் சைக்கோ கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. காரணம் என்ன? என்பதே கதை. கிரைம் திரில்லரான இது ஹாலிவுட் படத்துக்கு சவால் விடும் வகையில் திரைக்கதை இருக்கும். படம் பார்ப்பவர்கள் இதை உணர்வார்கள்.

விஜய் ஆண்டனி படத்துக்கு முதன் முறையாக வெளி இசையமைப்பாளர் சைமன் இசையமைக்கிறார். பிஎஸ். வினோத்தின் உதவியாளர் முகேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஷிமா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டு இந்திய ஆஸ்திரேலிய அழகியாக தேர்வானவர். அங்கு பல அழகி போட்டிகளில் பட்டம் வென்றவர். இந்த டைட்டிலை விஜய் ஆண்டனிதான் தேர்வு செய்தார்’. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kolaigaran, Vijay Antony, Arjun, கொலைகாரன், விஜய் ஆண்டனி, அர்ஜுன்