வெற்றிக்கனி பறிப்போம்: பன்னீர், பழனி சபதம் India News

Let's get the victory: Panneer, Palani oathed

'லோக்சபா தேர்தலில், வெற்றிக்கனி பறித்து, வெற்றி வீரர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

அவர்களது அறிக்கை:அ.தி.மு.க.,வை உருவாக்கிய, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை, இன்று, தமிழ் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை மீட்டெடுத்து, ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டியவர். இன்று, எதிரிகளும், துரோகிகளும், நம் ஒற்றுமையை பார்த்து, மிரண்டு போயிருக்கின்றனர். நமக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு, உண்மைக்கு புறம்பாக, உளறி கொண்டிருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைந்தாலும், அ.தி.மு.க.,வை வெல்ல எவராலும் இயலாது என்பதை, இந்த உலகிற்கு உணர்த்தி காட்ட வேண்டும். தொடர்ந்து, அ.தி.மு.க., ஆட்சி தான் என்பதை உண்மையாக்கி காட்ட வேண்டும். லோக்சபா தேர்தல் களத்தில், வெற்றி வாகை சூடுவோம்.வெற்றிக் கனி பறித்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள், என்றுமே வெற்றி வீரர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Panneer, Palani, Details of ADMK, OPS, EPS, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, Victory in the elections, பன்னீர், பழனி சபதம், வெற்றிக்கனி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி