தமிழக கோவில்களில் கடைகளை அகற்ற உத்தரவு India News

Orders to remove shops in Tamil temples

தமிழக கோவில்களில் உள்ள கடைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து தமிழக கோவில்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்: ‛‛ தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் வளாகங்கள், மற்றும் கோவில் மதில் சுவர்களை ஒட்டியுள்ள கடைகளை உரிய வழிமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும். கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவிலில் உள்ள சிற்பங்களுக்கு சேதம் ஏற்படதாவாறு மின் வயரிங் செய்யப்பட வேண்டும். 

பக்தர்கள் கொண்டு வரும் நெய், எண்ணெய் ஆகியவற்றை சேகரித்து அன்றாட பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பெரிய கோவில்கள் அருகே தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கோவில்களில் தீ தடுப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை தீத்தடுப்பு கருவிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 

இதுகுறித்து தணிக்கை செய்ய தலைமை செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான அதிகாரிகள், வல்லூநர்கள், ஊழியர்கள், நிதிகள் குறித்து 2 வாரங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அமைக்கப்படவுள்ள குழுவிற்கு கோவில் நிர்வாகம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவேண்டும். இவ்வாறு தனது உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : tamilnews,indianews,tamilnews,Tamil temples,temples,hindou,templeshindou,hindoutemples,Orders to remove shops in Tamil temples,தமிழக கோவில்களில் கடைகளை அகற்ற உத்தரவு