'பரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை' : மோடி பேச்சு India News

'People do not want generation of leaders to rule them ' : Modi speech

''பரம்பரை ஆட்சியை மக்கள் விரும்பவில்லை,'' என, தமிழக, பா.ஜ., பொறுப்பாளர்கள் மத்தியில், பிரதமர் மோடி பேசினார்.

மயிலாடுதுறை,பெரம்பலுார்,தேனி, சிவகங்கை, விருதுநகர் உட்பட பல்வேறு லோக்சபா தொகுதிகளின், பா.ஜ., பொறுப்பாளர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக,பிரதமர் மோடி, நேற்று பேசியதாவது:

கடந்த நான்கரை ஆண்டு, பா.ஜ., ஆட்சியில், ஊழல் இன்றி, மக்களின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இளம் தலைமுறையினர், பரம்பரை ஆட்சியை விரும்பவில்லை; நாட்டின் வளர்ச்சியைத் தான் விரும்புகின்றனர். பா.ஜ., அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, மக்களிடமும், இளைஞர் களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். நாம், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம். சிலர், குடும்பத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுகின்றனர். 

பா.ஜ., பெற்ற வெற்றி, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பூத் கமிட்டி யினரின் கடும் முயற்சியால் கிடைத்தது. நீங்கள் கடுமையாக  முயற்சித்தால், வெற்றி கிடைக்கும்.பா.ஜ.,வில் மட்டுமே சாமானியரும் உயர் பதவிக்கு வர முடி யும். லோக்சபா தேர்தலில், நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். மத்திய அரசு, பெரு நிறுவனங் களுக்கு மட்டுமே, தொழில் தொடங்கவும், வர்த்தகம் புரிய வும் உதவி செய்கிறது எனும் தவறான கருத்து நிலவுகிறது; உண்மை அதுவல்ல. 

சிறு,குறு நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்கி, வளர்ச்சியை எட்டவும், மத்திய அரசு உதவி புரிகிறது. காங்., வீடு கட்டி கொடுப்பதை விளம்பரத் திற்காக செய்தது; பா.ஜ., ஏழைகளை மையப்படுத்தி, கட்டி தருகிறது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்., 25 லட்சம் வீடுகளை கட்டி கொடுத்தது. பா.ஜ.,வின் நான்கு ஆண்டு ஆட்சியில், 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டன. தமிழகத்தில், 4.30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. இத்திட்டங் களை, வீடுதோறும் கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

'ராகுலை ஏற்க காங்., பயம்'


''கூட்டணியின் தலைவராக ராகுலை ஏற்க, காங்கிரசாரே பயப்படுகின்றனர்,'' என, பா.ஜ., மாநில தலைவர், தமிழிசை கூறினார்.விருதுநகரில், நிருபர்களிடம், தமிழிசைகூறியதாவது:
தேர்தலில் களமிறங்கும் இரு கூட்ட ணிக்கும் வித்தியாசம் உள்ளது. ஒன்று மக்கள் கூட்டணி; இன்னொன்று வாரிசு கூட்டணி. பா.ஜ., கூட்டணிக்கு வலிமையான தலைவர் உள்ளார்.ஆனால், காங்., கூட்டணியில், ராகுலை தலைவராக ஏற்க, அவரது கட்சியினரே பயப்படுகின்றனர். தமிழகத்தில், பா.ஜ., 

கூட்டணி அமைத்தே போட்டியிடும். பிரதமர் மோடியின் திட்டங்களால், நாடு முன்னேறி உள்ளது. 

மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது, காலத்தின் கட்டாயம். மக்களுக்கு எதிராக உள்ளவற்றை, பா.ஜ., ஒரு போதும் ஏற்காது. அதனால் தான், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, மதுரையில் நிருபர் களிடம் பேசிய தமிழிசை, ''எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க உத்தரவிட்டதற்காக பிரத மருக்கு, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் ஆகியோர் நன்றி கூட தெரிவிக்காதது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. 

''எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்ட, 27ல் மதுரை வரும் பிரதமர் மோடிக்கு, கறுப்பு கொடி காட்டுவதாக கூறும், ம.தி.மு.க.,பொது செயலர் வைகோவை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,'' என்றார். 

Tags : Modi, Details of Modi, Modi's speech, Modi's politics, பிரதமர் மோடி, PM Modi, Modi's speech among Tamil politicians, பரம்பரை ஆட்சி, பா.ஜ., BJP, BJP's politics, Tamil politicians, மோடி பேச்சு, மோடி, Generation leaders