இளைஞர்களுக்கு முதியோர் வழிவிட வேண்டும் - ரங்கசாமி பேட்டி India News

Rangaswamy interview elders give way to youngsters

வயது முதிர்ந்தோர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார். #LSPolls #Rangaswamy

புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தி கட்சியின் தலைவர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
 புதுவை பாராளுமன்ற தொகுதி அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராக அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு நாராயணசாமி போட்டியிடுகிறார். டாக்டருக்கு படித்த சிறுவயது இளைஞர்.

ஒரு இளைஞரை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம் என்ற பெருமையை நாம் பெற முடியும். இவர் நன்றாக மக்கள் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வயது முதிர்வு காரணமாக சோர்வு ஏற்படும். வயது முதிர்ந்தோர் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இளைஞர் என்பதால் வேட்பாளர் நாராயணசாமிக்கு சோர்வு ஏற்படாது. நீண்டநாட்கள் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு பணியாற்றுவார். நிறைய அனுபவத்தையும், நல்ல அனுபவத்தையும் அவர் பெறுவார்.என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்ய புதுவை வர உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் யார்? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, விரைவில் அறிவிக்கப்படுவார் என ரங்கசாமி தெரிவித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி இழந்துள்ளார். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? என எழுப்பிய கேள்விக்கு மக்களுக்கு நன்றாக தெரியும். யார்-யார் எப்படி? என தெரியும். அனைவரையும் புதுவை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர் என்று ரங்கசாமி தெரிவித்தார். #LSPolls #Rangaswamy

Tags : Rangaswamy, elders, youngsters, இளைஞர்கள், முதியோர், ரங்கசாமி