இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் Cinema News

Samsung Galaxy M10 to Reportedly Feature Exynos 7870 SoC

சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyMSeries #smartphone

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவ்விழாவில் சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்நிலையில், கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன் படி கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் டிஸ்ப்ளே, 14 என்.எம். ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட், 2 ஜி.பி. அல்லது 3 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க பின்புறம் டூயல் பிரைமரி கேமரா: 13 எம்.பி. + 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. இத்துடன் இன்ஃபினிட்டி வி ரக ஸ்கிரீன், வால்யூம் ராக்கர், பவர் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

இத்துடன் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இடதுபுறம் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளிட்டவை காணப்படுகிறது.

Tags : Samsung, Galaxy M10, Smartphone, சாம்சங், கேலக்ஸி எம்10, ஸ்மார்ட்போன்