செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார் Cinema News

Sivakumar thrashes fans cellphone

செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது. #Sivakumar

சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. அந்த வீடியோவில் ரசிகர் சிவகுமார் முன்பாக செல்போனை நீட்டியபடி செல்பி எடுக்க முயற்சிப்பதும், அதனை சிவக்குமார் தட்டிவிடும்படியாகவும் அந்த வீடியோ முடிகிறது.

முன்னதாக மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. 

இதையடுத்து அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருந்த சிவக்குமார், அந்த இளைஞருக்கு புதிய செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sivakumar

Tags : Sivakumar, சிவக்குமார்