பரிக்கர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி India News

Strike demanding the resignation of Parikkar

கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் அடுத்த 48 மணிநேரத்தில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, பரிக்கர் வீட்டை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

மனோகர் பரிக்கர் பதவி விலக வேண்டும் எனவும், அவருக்கு பதிலாக முழு நேர முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர்.

இதில் காங்கிரஸ், தேசியவாத காங்., சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் பங்கேற்றனர். முதல்வராக இருக்கும் பரிக்கர் நோய்வாய்ப்பட்டு, 9 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்து வருவதால் கோவாவில் அரசு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வரின் இல்லம் நோக்கி சென்ற இந்த பேரணியை, பரிக்கர் வீட்டின் அருகே 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.போராட்டக்காரர்களுடன் கலெக்டர் திருப்பாதியும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்து, அவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Parrikar, Parikkar, Resignation of the post, Strike, Manohar Parikkar, கோவா, Goa, Goa minister, பரிக்கர், மனோகர் பரிக்கர், Details of Goa, பிரம்மாண்ட பேரணி