வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம் Cinema News

Suriya son Dev not acting in film Offically clarified

சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சூர்யாவின் மகன் நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. #Suriya #Dev

சூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருமே பொது நிகழ்ச்சிகளில் சூர்யா ஜோதிகா உடன் கலந்து கொள்வார்கள். ஆனால், படத்தில் நடித்ததில்லை.

சமீபத்தில், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சூர்யாவின் மகன் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்தி வெளியான சமயத்தில் 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும், “தங்களுடைய படத்தில் நடிக்க 6-8 வயது நிரம்பிய சிறு குழந்தைகள் தேவை” என்று விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இப்பதிவை வைத்து, இதில் தான் சூர்யாவின் மகன் தேவ் நடிக்கவுள்ளார் என்று செய்திகளை வெளியிட்டனர்.

சூர்யாவின் ரசிகர்களும் இதைக் கொண்டாட தொடங்கியதைத் தொடர்ந்து, 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், சூர்யாவின் நெருங்கிய நண்பருமான ராஜசேகர் பாண்டியன் “தவறான செய்தி. வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Suriya #Dev

Tags : Suriya, Suriya Son Dev, Dev, Jyothika, 2D Entertainment, சூர்யா, சூர்யா மகன் தேவ், தேவ், ஜோதிகா, 2டி என்டர்டெயின்மெண்ட்