முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு India News

The first woman who was selected at the Supreme Court Judge

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்பர்.


இந்நிலையில் முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா,61 சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் இவரை பரிந்துரைத்தது. 35 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக இருந்து வரும் இந்து மல்ஹோத்ரா, மூத்த வழக்கறிஞர்களான ரோஹின்டன் பாலி நாரிமன், யு.யு. லலித், எல். நாகேஸ்வரராவ் ஆகியோருக்கு ஜூனியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவரது தேர்வை மத்தியஅரசு ஏற்கும் பட்சத்தில் அடுத்த 4 ஆண்டுகள் இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகிப்பார்.

Tags : Supreme Court Judge, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் பாலி நாரிமன், யு.யு. லலித், எல். நாகேஸ்வரராவ், First woman as Supreme Court Judge, முதல் பெண் வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட் நீதிபதி, கொலீஜியம், First woman was selected as Supreme Court Judge, முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு, Success of Women, Success of Indian women