பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு India News

The Government of Rajasthan has reduced the VAT tax on petrol

பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு . இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் டீசல் விலை ரூ.76-க்கும் குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. 

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது மற்றும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.இருப்பினும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 10-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.இந்நிலையில் பா.., ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் , பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துள்ளதாக மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.மக்களின் மீதான சுமையை குறைக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பெட்ரோல்ரூ. 83.26 -க்கும் டீசல் ரூ.77.17க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Diesel problem, Fuel problem, VAT tax, VAT tax reduced, பெட்ரோல் விலை உயர்வு, Rajasthan government, ராஜஸ்தான் அரசு, வாட் வரி , வரி குறைப்பு