வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முக்கிய அறிவிப்பு Cinema News

Vantha Rajavathaan Varuven single Releasing Tomorrow

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #VanthaRajavathaanVaruven #RedCardu

`செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1-ந்தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘ரெட் கார்டு’ என்ற சிங்கிள் ட்ராக்கை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிம்பு பாடியிருக்கும் இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். #VanthaRajavathaanVaruven #RedCardu

Tags : Vantha Rajavathaan Varuven, Red Cardu, Simbu, STR, Sundar C, Mahat, Megha Aakash, வந்தா ராஜாவாதான் வருவேன், சிம்பு, ரெட் கார்டு, சுந்தர் சி, மேகா ஆகாஷ், மகத்