விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் Cinema News

Vignesh Shivan Direct Sivakarthikeyan movie

மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Sivakarthikeyan #VigneshShivan

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை அடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், 2020 இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

Tags : Sivakarthikeyan, Vignesh Shivan, SK 17, Lyca, சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், லைகா