சிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி Cinema News

Vijay Sethupathi SU Arun Kumars next offically titled Sindhubaath

சேதுபதி படத்தை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு சிந்துபாத் என்று தலைப்பு வைத்துள்ளனர். #Sindhubaath #VijaySethupathi

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்கி வருகிறார். 

கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதன்படி படத்திற்கு `சிந்துபாத்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Sindhubaath #VijaySethupathi

Tags : Sindhubaath, Vijay Sethupathi, Arunkumar, Anjali, Yuvan Shankar Raja, சிந்துபாத், விஜய் சேதுபதி, அருண் குமார், யுவன் ஷங்கர் ராஜா, அஞ்சலி