ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா India News

We will not overthrow the ruling : Eddyurappa

கர்நாடக அரசை கவிழ்க்க போவதில்லை எனவும், காங்., மற்றும் மஜத கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை எனவும் முன்னாள் முதல்வரும், கர்நாடக மாநில பா.ஜ., தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த எடியூரப்பா கூறுகையில், எங்கள் கட்சி எம்எல்ஏ.,க்கள் டில்லியில் இருந்து பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். அப்போது வறட்சி நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். 

எந்த நிலையிலும் நாங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் . அதனால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலை கொள்ள தேவையில்லை என்றார்.

Tags : overthrow the ruling, Eddyurappa, Details of Eddyurappa, காங்கிரஸ், Congress, Statements of Eddyurappa, எடியூரப்பா, ஆட்சி, கட்சி எம்எல்ஏ.,க்கள், Ruling, கர்நாடக மாநில பா.ஜ, BJP