கர்நாடகாவில் தப்புவாரா குமாரசாமி? India News

Will Kumarasamy from Karnataka ?

கர்நாடகாவில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து கீழே இறக்க, பா.ஜ., திரைமறைவில் ஆடும் சதுரங்க விளையாட்டு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சட்டசபை தேர்தலில், அதிக தொகுதி களை, பா.ஜ., பெற்றிருந்தும் அதை ஆட்சிக்கு வர விடாமல், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. இந்த அரசை கவிழ்க்க, பா.ஜ., திரைமறைவில் காய் நகர்த்துகிறது. 

இரண்டு சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக, நேற்று முன்தினம் கவர்னருக்கு கடிதம் எழுதினர்.இந்த பரபரப்பு நீங்காத நிலையில், காங்கிரசின் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், ராஜினாமா செய்யவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இவர்கள் ராஜினாமா செய்தால், மேலும் சிலர் ராஜினாமா செய்வது உறுதி. இதனால், ஆட்சி கவிழக்கூடும் என்ற அச்சத்தில், ம.ஜ.த., - காங்., தலைவர்கள் உள்ளனர்.

Tags : Kumarasamy, Details of Kumarasamy, Statements of Kumarasamy, Congress leaders, காங்கிரஸ், ம.ஜ.த., கூட்டணி, Congress, MLAs, சதுரங்க விளையாட்டு, Kumarasamy escaped, குமாரசாமி, கர்நாடகா, Kumarasamy of Karnataka, Karnataka